Contact Enquiries : 0427-2295479

For Appoinments: +91 9789555680

Blood Bank Enquiries : 0427-2415432 +91 9600940016

Find a Consultant

A Center for Medical Excellence, functioning with 60 beds, where new and advanced techniques of the Modern Medicines are supplemented with Traditional Medicines. The hospital was started with the intention of providing quality and affordable health care to the poor and needy community.

சரவணா மருத்துவமனையின் 3ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி மனசோட பேச என்ற தலைப்பில் நலவாழ்வுக்கான வாழ்வியல் கருத்தரங்கம் 05.06.16 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னீஸ் கேட்வேயில் நடைப்பெற்றது.இதில் கருத்தரங்கின் நோக்கம் குறித்து சரவணா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் எஸ்.அசோக் அவர்களும்,சிறப்பு விருந்தினராக ஆர்.அசோகா அவர்களும்,காதல் மனம் என்ற தலைப்பில் மருத்துவர் க.சங்கர் அவர்களும்,நுகர்வோர் மனம் என்ற தலைப்பில் மருத்துவர் கு.சிவராமன் அவர்களும்,இந்திய மனம் என்ற தலைப்பில் திரு.சு.வெங்கடேசன் அவர்களும்,நலம் தரும் மனம் என்ற தலைப்பில் மருத்துவர் மோகனவெங்கடாசலபதி அவர்களும் பேசினார்கள்.இந்த செய்தி தினமணி மற்றும் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது.

sample

பாரம்பரியமும்,நவீனமும் ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை:

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் மாறிவிட்ட உணவுப்பழக்க வழக்கம்,உடல் உழைப்புஇல்லாதது,சத்தான சரிவிகித உணவு இல்லாதது ஆகியவை பல்வேறு நோய்களுக்கு வித்திடுகிறது.மனஅழுத்தம்,மனச்சோர்வு ஆகியவை நவீன உலகின் நோய்களாகப் பிடித்திருகிறது.எப்போதோ அழிக்கப்பட்ட வைரஸ்தொற்று உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாததால் மீண்டும் உயிர்ப்பெற்று மனிதனை ஆள்கொள்கிறது.

வளர்ந்த நாடுகளில் உடல் பருமன்,மாரடைப்பு,புற்றுநோய்,பக்கவாதம்,நுரையீரல் கோளாறு,சர்க்கரை,உயர் இரத்தஅழுத்தம் எனப் பலவகை நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகின்றனர்.வளரும் நாடுகளில் நுரையீரல்தொற்று,புற்றுநோய்,வயிற்றுப்போக்கு,ரத்தசோகை,எச்.ஐ.வி,அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் சாலைவிபத்துகள் ஆகியவை இடம் பெறுகின்றன.

பாரம்பரிய மருத்துவ முறை:

உலகம் முழுவதும் பரவியுள்ள நோய்களைத் தீர்ப்பதில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியமருத்துவ முறையான சித்த மருத்துவம் முக்கியப் பங்கு பெறுகிறது.

உலகளவில் இந்தியா,சீனா,திபெத்திய நாடுகளுகளில் பாரம்பரிய மருத்துவ முறை பிரபலமாகி வருகிறது.மூலிகைமருத்துவத்துக்கு பக்க விளைவுகள் இல்லை.விலை குறைவு,எளிதில் கிடைக்கும் பொருளாக சித்த மருத்துவம்உள்ளது.

உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி 80 சதவீதமானோர் முதலில் பாரம்பரிய மருத்துவ முறைகளையேபயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.உணர்வோடும்,மரபோடும் பொருந்தியதாக பாரம்பரிய மருத்துவம்உள்ளது.இன்றைய நவீன உலகின் நோய்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து ஆன்டிபயாட்டிக் பயன்படுத்தப்படுகிறது.இந்த நோய் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையுடன் சரியான கால அளவில் சாப்பிட்டால் பிரச்னைவராது.ஆனால்,சரியான கால அளவில் பயன்படுத்தாவிட்டால் மீண்டும் நோய் எதிர்ப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்நிலை ஏற்படும்.இதில் பக்க விளைவுகளும் உண்டு.

சித்த மருத்துவம் மனதைப் பற்றியது.முதலில் உள்ளத்தை வலிமைப்படுத்தும்.உலக சுகாதார நிறுவன ஆய்வில்,60முதல் 80 சதவீதமான நோய்களுக்கு மூலக் காரணமாக இருப்பது மன அழுத்தமே காரணம் எனத் தெரியவந்ததுள்ளது.உயர் ரத்த அழுத்த நோய்,சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்களே இன்றையபொதுவான நோயாக மாறியுள்ளது.

சித்த மருத்துவம் தரும் தீர்வு:

சித்த மருத்துவத்தில் மூட்டு வலி,வைரஸ் நோய்களான டெங்கு,சிக்குன்குனியா,ஆஸ்துமா,உயர்ரத்தஅழுத்தம்,சர்க்கரை நோய்,தோல்நோய்,குழந்தையின்மை,நாள்பட் நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.பக்கவிளைவில்லாத மூலிகை மருத்துவம் மூலம் உடலை வலிமைப்படுத்தி பலவித நோய்களுக்கு தீர்வுகாணப்படுகிறது.சித்த மருத்துவம் உணவே மருந்து, மருந்தே உணவு எனக் கூறுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் மூலிகைத் தோட்டம் அமைப்பதால் சிறிய நோய்களுக்கு நாம் மருத்துவமனையை நாடிச்செல்வதைத் தவிர்க்கலாம்.உடனடித் தீர்வு இல்லாமல் இருந்தாலும்,பக்க விளைவில்லாத நிரந்தரமாக நோயைமுற்றிலும் குணமாக்கக் கூடியது சித்த மருத்துவம்.

உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்கள் தொடங்கி பற்பசை,மருத்துவ துறையிலும் மூலிகையின் பங்களிப்புஅதிகமாகிவிட்டது.மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை கலந்த பொருள்களுக்கு நுகர்வோர் மத்தியில் மிகுந்தவரவேற்பு உள்ளது. நோய்களைப் பற்றி சித்த மருத்துவம் கணிப்பதில்லை.மாறாக,நோயாளியின்உடல்,உள்ளத்தைக் கணித்து மருந்து கொடுக்கிறது.

ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை:

பாரம்பரிய மருத்துவத்தைப் போல நவீன மருத்துவமும் நமக்குத் தேவையாக உள்ளது.எனவே பாரம்பரியமருத்துவத்தை,நவீனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சீனா முன்மாதிரியாக உள்ளது.

தற்போது இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவம் மெதுவாக வளர்ந்து வருகிறது.மருத்துவ துறையில் அலோபதிஎனும் நவீன மருத்துவம், சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,யோகா மற்றும் இயற்கை மருத்துவம்,யுனானி எனமருத்துவப் பிரிவுகள் உள்ளன.

 ஒரே மருத்துவமனையில் அனைத்து மருத்துவமுறையைப் படித்த மருத்துவர்களைப் கொண்டு பக்கவிளைவில்லாத,குறைந்த செலவில் நோய்களுக்கு தீர்வு காணும் முறையே  ஒருங்கிணைந்த மருத்துவத்தின் முதல்படி.

ஒரு நோயால் அவதிப்படும் நோயாளி அலோபதி ஓர் ஆண்டும்,சித்த மருத்துவம் இரண்டு ஆண்டும்,ஆயுர்வேதம்-யோகா ஓர் ஆண்டு என ஒவ்வொன்றாகப் பார்த்து கடைசியில் ஒரு துறையை வந்தடையும் போது அவர்பணத்தையும்,நேரத்தையும் இழந்திருப்பார்.இது போன்ற நிலையைத் தவிர்க்கவே ஒருங்கிணைந்த மருத்துவம்தேவைப்படுகிறது.

குழந்தைப் பேறைத் தாமதப்படுத்தும் வகையில் கருத்தரிப்பில் உள்ள பிரச்னைகள்,சர்க்கரை நோய்,உயர்ரத்தஅழுத்தம்,மூட்டு வலி,மன நோய்கள்,புற்று நோய், நாள்பட்ட வாழ்வியல் சிக்கல்களுக்கு ஒருங்கிணைந்தமருத்துவச் சிகிச்சை அணுகுமுறை பலன் அளிக்கிறது.உயிர் காக்கும் ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை முறைமூலம் நோயாளியின் துன்பத்தைக் குறுகிய காலத்தில் தீர்ப்பதால் செலவும் குறைந்து,உடல் நலமும்காக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை அணுகு முறை தற்போது மெல்ல வளர்ந்து வருகிறது.பெரியமருத்துவமனைகளில் கூட ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை முறை வந்துவிட்டது. அகில இந்திய அளவில்மருத்துவ துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்,ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை முறையிலும்முன்னோடியாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

sample

சரவணா மருத்துவமனையின் 3ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி மனசோட பேச என்ற தலைப்பில் நலவாழ்வுக்கான வாழ்வியல் கருத்தரங்கம் 05.06.16 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னீஸ் கேட்வேயில் நடைப்பெற்றது.இதில் கருத்தரங்கின் நோக்கம் குறித்து சரவணா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் எஸ்.அசோக் அவர்களும்,சிறப்பு விருந்தினராக ஆர்.அசோகா அவர்களும்,காதல் மனம் என்ற தலைப்பில் மருத்துவர் க.சங்கர் அவர்களும்,நுகர்வோர் மனம் என்ற தலைப்பில் மருத்துவர் கு.சிவராமன் அவர்களும்,இந்திய மனம் என்ற தலைப்பில் திரு.சு.வெங்கடேசன் அவர்களும்,நலம்தரும் மனம் என்ற தலைப்பில் மருத்துவர் மோகனவெங்கடாசலபதி அவர்களும் பேசினார்கள்.

Saravana Hospital rendered its splendid and sumptuous services for more than two decades for the people community. A person who comes with scathing problems is given salubrious treatment.

Saravana Hospital is a Multispeciality Integrated hospital with advanced equipments, latest technologies and therapies which gives a total health care for the patients.

Saravana Hospital rendered its splendid and sumptuous services for more than two decades for the people community. A person who comes with scathing problems is given salubrious treatment.

Patients are given spunk therapies, mentally and physically through yoga and siddha treatments. This will make them surmount easily out of their medical discomforts.

24 hrs Supporting Services

  • Laboratory Service
  • Blood Bank
  • Pharmacy
  • X-ray and Bed Side X-ray
  • Ultra Sonogram Scan
  • EEG,EMG,ECG
  • Well equipped ambulance
  • ICU

Saravana Hospital is a place where each and every members of a family from Pediatric to geriatric are treated with gentle care for perfect health for their life time.

CSR Activities

Saravana Hospital initiates Corporate Social responsibilities (CSR) promote awareness on social wellbeing and educational programs on preventive care on several healths related problems.

Make an Appointment